11 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 2 மாணவர்களை போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.. தந்தை மற்றும் அத்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள்.. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமி, கீழ் வீட்டில் டிவி பார்க்கச் செல்வது வழக்கம்.. கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோரும் வேலைக்குச் செல்லும் நிலையில், அங்குள்ள மாணவர் மட்டும் வீட்டிலிருந்து வருகின்றார்.
இந்த சூழலில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்த நிலையில், அதில் ஆபாச படங்களை அந்தமாணவர் பார்த்து வந்துள்ளார்.. மேலும் 11ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவரையும் வீட்டுக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்து ரசித்து வந்துள்ளனர்..
இந்தநிலையில் தான் மே 20ஆம் தேதி கீழ் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்கு வந்த சிறுமியை வற்புறுத்தி, மாணவர்கள் இருவரும் ஆபாச படங்களை பார்க்க வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மேலும் ஒரு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனையும் அழைத்து வந்து 3 பேரும் சேர்ந்து சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தநிலையில் 11 வயது சிறுமிக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டுள்ளது.. இதனையடுத்து, அவரை தந்தையும், அத்தையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.. அங்கு அவரைப் பரிசோதிதனை செய்த மருத்துவர்கள் சிறுமி, தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தனர்.. இது குறித்து மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, நடந்த சம்பவங்களை பற்றி சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.. இதுகுறித்து சிறுமியிடம் புகார் பெற்ற கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதில், 2 பள்ளி மாணவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்த போலீசார், தலைமறைவாகயிருக்கும் மற்றொரு மாணவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.. ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்தது, அவர்களுக்கே வினையாக முடிந்துள்ளது சக பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது மட்டுமே மொபைல் போனை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்க வேண்டும். மற்ற நேரங்களில் அனுமதிக்க கூடாது.. அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்.. மாணவர்கள் கையில் ஸ்மார்ட்போன் கொடுக்கும்போது, அதை எப்படி பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும்’ எனக் கூறினர்.