Categories
மாநில செய்திகள்

இப்படியே விட்டுவிட மாட்டடோம் – சங்கர் வழக்கில் தமிழக அரசு அதிரடி முடிவு …!!

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை கூலிப்படை தாக்குதல் நடத்தியது.  இந்த வழக்கு தொடர்பாக 2016திருப்பூர் நீதிமன்றம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வாக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைதது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியான்ஸ் கூறுகையில்,  பல மாதங்களாக வழக்கின் தீர்ப்பை கேட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் இன்று காலை தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியும், ஒரு சிலரை விடுதலை செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள்  கொண்டு போவோம். தமிழக அரசு இது சம்பந்தமாக சட்ட  ஆலோசனை கேட்கிறது. இதுபோன்ற குற்றத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக வழக்குப் போட்டு மிக சரியான முறையில் நடவடிக்கை எடுத்தது .

அதற்க்கு ஒரு சான்றாக தான் கீழமை நீதிமன்றம் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது. இது  சம்பந்தமான சட்ட நுணுக்கங்களை நாங்கள் பார்த்து உச்சநீதிமன்றத்திற்கு சொல்வோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

Categories

Tech |