காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,214 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,159 ஆக இருந்தது. மேலும், நேற்றுவரை காஞ்சிபுரத்தில் 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக இருந்த நிலையில் தற்போது 616 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த 4 மாவட்டங்களில் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று 3வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த 12 நாட்கள் முழு ஊரடங்கு முடிவதற்குள் கொரோனா கட்டுக்குள் வருமா? என்று எதிர்பார்ப்பும் கேள்வியும் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன.