Categories
மாநில செய்திகள்

மின்தேவை குறைந்ததால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு… அமைச்சர் தங்கமணி!!

கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% ஊழியர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், சாதாரண காலங்களில் ஏற்படும் மின்தேவைகளை விட, ஊரடங்கு காலத்தில் மின்தேவை குறைந்துள்ளது.

இதன் காரணமாக அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா அதிகம் பாதித்துள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலனை நடத்தி வருகிறது.

Categories

Tech |