Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சியில் 26ஆம் தேதி முதல்வர் நேரில் ஆய்வு …!!

வருகின்ற 26ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ஆய்வு செய்ய இருக்கின்றார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி பாசனத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதியில் குறுவை சாகுபடி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாகவே திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் உடனடியாக கடைமடைக்கு செல்லக்கூடிய வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் மட்டும் 20 பணிகள் சுமார் 6 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்ட இந்த பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த குடிமராத்து பணிகளை நேரில் பார்வையிடுவதற்காகவும்,  வேளாண் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வருகின்ற வெள்ளிக்கிழமை முதலமைச்சர் வர இருக்கின்றார். தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அவருடைய நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு கொரோனா இருக்கிறதா ? என்பது குறித்து இரத்தப்பரிசோதனை நாளை காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதேபோல திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்கக் கூடிய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க கூடிய மற்றும் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பரி சோதனை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |