தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதேபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.