சீனாவை தனிமைப்படுத்துதலில் கைகோர்த்து நிற்கும் ஆசியா நாடுகள்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிறிய நாடுகளாக இருந்தாலும் , பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்ட நாடுகளாக இருப்பது சிங்கப்பூர், மலேசியா. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக இவர்களின் எல்லைப் பிரச்சனைகளுக்கு கை கொடுத்து நிற்கக் கூடிய சூழலில் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா சீனாவுக்கு இடையே ஒரு வர்த்தக போரும் நிலவும் தருணத்தில் அமெரிக்கா ஆசியா நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருக்கக்கூடிய கனடா, இந்தியா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவிற்கு எதிராக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தங்களுடைய பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டமைப்பால் பிற்காலத்தில் சீனாவிற்கு தலை வலி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சீனா மேலும் தங்களுடைய ஆதிக்கத்தை வேகமா செலுத்துவதற்காக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.