Categories
தேசிய செய்திகள்

ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடல்… பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா?… போலீசார் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில், பெண்ணின் உடல் ஒன்று மிதந்துவந்தது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை அங்கிருந்து வெளியே எடுத்து கொண்டு வந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பெண்ணின் உடலில் சில காயங்கள் தென்பட்டுள்ளன. இதனால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |