திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), சரவணராஜி (25), சிவகுமார் (24) ஆகிய 3 பேரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய 2 பேர் அவர்களிடமிருந்து 2,25,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார்.. இதையடுத்து, இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் கைதுசெய்தனர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இதேபோன்று 21 நபர்களிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி சுமார் ரூ 30 லட்சம் வரை பணம் பெற்றதை ஒப்புக் கொண்டனர்.. இதையடுத்து, அவர்களிடமிருந்து 3 கார்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.