Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படிக்காம டிவி பாக்குற… கடுமையாக திட்டிய பெற்றோர்… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு 16 வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.. கனிஷ்கா மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு என்பதால் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

இதனை அனைத்து மாணவர்களும் படித்து வந்துள்ளனர். ஆனால், கனிஷ்கா படிக்காமல் டிவி மற்றும் செல்போன் போன்றவற்றில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இதனால், அவரின்  தாய் மற்றும் தந்தை கனிஷ்காவை படிக்கச் சொல்லி பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கனிஷ்கா அதனை பொருட்படுத்தாமல் நேற்றும் வழக்கம் போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட தந்தை நாரயணன் மிகவும் ஆத்திரமடைந்து கடுமையாக திட்டியுள்ளார்.. இதில், மனமுடைந்து போன மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நாராயணன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |