Categories
சேலம் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மற்றும் சேலத்திலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலாகிறது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் மாவட்டத்திலும் வரும் 24ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்து சேலம் மாநகர அனைத்து வணிகர் சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 19ம் தேதி முதல் 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 4 மாவட்டத்தை தவிர்த்து மேலும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முழுஉரடங்கு அமல்படுத்த தமிழக அரசு அலையோசனை நடத்தியது.

அதன் முடிவில் மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடைகள் இயங்க நேரக்கட்டுப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நாமக்கல் மற்றும் சேலத்திலும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |