Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 37 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 800ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 623ஆக உயிரிழந்துள்ளனர். இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று  2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,579 பேர் ஆண்கள், 953 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 29,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46 அரசு மற்றும் 40 தனியார் மையங்கள் என மொத்தம் 86 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 3,060 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 51,653 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 7,374 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |