கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து 7 நாளில் பணிகளை துவங்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதேபோல, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவரின் உறவினருக்கும், மருத்துவமனைக்கும் பரிசோதனை அறிக்கை தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 62,087 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 37 பேர் கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 794 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.