மிதுன ராசி அன்பர்களே….! இன்று பணவரவு அதிகரித்து பரவசப்படும் நாளாக இருக்கும். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சியை கொடுக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்டு பிறகு சரியாகி மகிழ்ச்சியான சூழலில் உண்டாகும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.
எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். வேகத்துடன் செயல்படுவது நன்மையைக் கொடுக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது ரொம்ப நல்லது. பணம் வரவு அதிகமாக இருக்கும். சேமிப்பதற்கு கண்டிப்பாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இறைவழிபாட்டால் இன்று இனிமை காணும் நாளாகத்தான் இருக்கும்.
காதலர்களுக்கும் இன்று எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சுமூகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சரியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.