கடக ராசி அன்பர்களே …! உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் ஓங்கி நிற்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் பேசி மகிழ்ச்சி கொள்விர்கள். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் கொஞ்சம் தடங்களும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
செயல்திறன் கூடும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை எப்போதுமே தவிர்த்துவிடுங்கள். பொறுமையும், நிதானமும் இருந்தால் இன்றைய நாள் அனைத்து விஷயங்களிலும் சிறப்பாகவே நீங்கள் செய்ய முடியும். தூர தேசத்து பயணங்கள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.
அதேபோல புதிய முயற்சிகளிலும் ஏதும் ஈடுபடாமல் இருந்தால் அது போதும். காதலர்களுக்கு இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.