காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் தான் கண்ணதாசன். கண்ணதாசனின் அப்பா பெயர் சாத்தப்பன் அம்மா பெயர் விஷாலட்சுமி. கண்ணதாசனுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் 1944 ஆம் ஆண்டில் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியில் சேருவதற்காக சொந்த ஊரிலிருந்து அந்த பத்திரிக்கை இயங்கிவந்த புதுக்கோட்டைக்கு சென்றார்.
அங்கே இருந்த சிலர் நீங்கள் ஏதும் கட்டுரை, கவிதை எழுதி இருக்கிறார்களா என கேட்டனர் அப்போதுதான் கண்ணதாசன் அவர்கள் என்னுடைய பெயரில் சில கவிதைகள் நான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்கள். என்ன பெயர் என்று அவர்கள் கேட்டபோது கண்ணதாசன் என்று சொன்னதும் ஆம் கண்ணதாசனை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி திருமகள் பத்திரிக்கையில் வேலை கிடைத்தது கண்ணதாசன் அவர்களுக்கு. பின்னர் திரை ஒளி, தென்றல், முல்லை ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தார் கண்ணதாசன்.
சினிமாவில் பாடல் எழுதினார் கண்ணதாசன். திரைப்பாடல்கள் பெருமை பெற்றது கண்ணதாசன் வருகைக்குப் பிறகுதான். திரைத்துறையில் தமிழை சரியாக பதிவுசெய்தார் கண்ணதாசன். 1978ல் சாகித்ய அகாடமி விருது கண்ணதாசனின் சேரமான் காதலி என்ற புத்தகத்திற்கு கொடுக்கப்பட்டது. நாடோடி மன்னன், மகாதேவி, மதுரை வீரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார் கண்ணதாசன். சிவகங்கை சீமை, கருப்பு பணம் போன்ற படங்களை தயாரித்தார். எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் நெருங்கிய நண்பரானார் கண்ணதாசன். 1981 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
அமெரிக்காவில் இருக்கும் சிக்காகோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கண்ணதாசன் மரணித்தார். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது கவிஞர் கண்ணதாசனின் உடல். அரசு மரியாதையோடு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் ஒன்றை கட்டப்படும் என அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 1990ல் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1992ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறக்கப்பட்டது கண்ணதாசன் மணிமண்டபம்.