Categories
பல்சுவை

கவிஞர் கண்ணதாசனின் பொன்மொழிகள்…!!

  • சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை.
  • எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
  • இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், இதே மாதிரி இரண்டு பக்கமும் சேரக்கூடிய மனிதர்கள் ஓடும் ஜாக்கிரதையாகவே பழகவேண்டும்.
  • குளிக்கும் அறையில் மெதுவாக செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய், வசதியாக இருக்கும் போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய்.
  • நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

  • அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
  • சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரை சாக்கடை ஆகிவிடும்.
  • அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
  • மீன் நீரிலே வாழ்வது ஆச்சரியமில்லை, அந்த நீரிலேயே கொதித்து சாவதுதான் ஆச்சரியம். மனிதனுக்கு நினைவுகள் இருப்பதும் ஆச்சரியமில்லை, அதிலேயே வெந்து மடிவது தான் வியப்பு.
  • மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது.

Categories

Tech |