காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய கவிதை பலரும் அறியாதது. அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் கண்ணதாசனை அவரது தமிழ் நண்பர் பார்க்க வந்தபோதே உடன் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நண்பரின் குழந்தைகளுடன் கண்ணதாசன் பேச முயற்சிக்க ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. அப்போது உடனடியாக தாள் ஒன்றை எடுத்து அதில் நான்கு வரி கவிதை எழுதி அவர்களிடம் கொடுத்து உள்ளார் கண்ணதாசன். அதுவே அவர் எழுதிய கடைசி கவிதை.
“மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – இங்கு
மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர் தமக்கென
கொண்டு வந்ததுமில்லை – பெற்ற தமிழையும்
விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை”