Categories
பல்சுவை

கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத அதிக நாட்கள் எடுத்த பாடல் எது தெரியமா…?

கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்திற்கு பாடல் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தமிழ் பாடல்கள் பிரசித்தி பெற்றன அவர் பாடல் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசமும் குறைவாகவே இருந்து வந்தது ஆனால் இயக்குனர் ஸ்ரீதரின் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதுவதற்கு 21 நாட்கள் எடுத்துக்கொண்டார். விசுவநாதன் டியூன் போட கண்ணதாசன் வரிகளில் உருவானதே அப்பாடல். ஆரம்பத்தில் பல டியூன்களை விசுவநாதன் போட்டும் கவிஞர் பல பாடல் வரிகளை கூறியும் இயக்குநர் ஸ்ரீதருக்கு பிடித்து பாடில்லை. இவ்வாறு இரண்டு மூன்று தினங்கள் போய்விட ஒருவழியாக விஸ்வநாதனின் டியூன் ஸ்ரீதருக்கு பிடித்துப்போனது. ஆனால் கவிஞருக்கு அதற்கேற்ற பாடல் வரிகள் வரவில்லை. அவர் கூறும் வரிகள் இயக்குநர் ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை.

படப்பிடிப்புக்கான நாளும் நெருங்க கோபத்தின் உச்சிக்கு சென்ற இயக்குனர் ஸ்ரீதர் என்னமோ செஞ்சு தொலைங்க எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். பிறகு விஸ்வநாதனும் கண்ணதாசனும் அமர்ந்து போராட கவிஞர் பல்லவி ஒன்றை கூறியுள்ளார். அதைக் கேட்டு உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதர் உடனடியாக வந்து இதுதான் பல்லவி மேலே எழுதுங்கள் என சத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டார். ஒருவழியாக ஸ்ரீதருக்கு பிடித்து விட்டது என அதே வேகத்தில் மொத்தப் பாடலும் எழுதி முடித்தார் கவிஞர் கண்ணதாசன். அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. ஸ்ரீதரின் படத்தில் 21 நாட்கள் எடுத்து பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் தான் மிகவும் விரைவாக பாடல் ஒன்றை ஸ்ரீதருக்காக எழுதிக் கொடுத்துள்ளார்.

நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தின் இறுதிக்கட்டத்தில் பட வெளியீடு தேதி அறிவிக்கப்பட்ட பின்பு ஸ்ரீதருக்கு தோன்றியுள்ளது இன்னொரு பாடலை படத்தில் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என பின்னர் எம்எஸ் விஸ்வநாதனை அழைத்து சொல்லி பாடலுக்கான டியூன் தேர்வானது. ஆனால் பாடலின் வரிகளை எழுதுவதற்கு கண்ணதாசன் அவசியம் வரவேண்டும். தற்போதைய காலகட்டத்தை போல் அன்றைய நாட்களில் செல்போன் இல்லாததால் கண்ணதாசனை கண்டுபிடிப்பது போராட்டமாக இருந்தது. ஒருவழியாக அவரை கண்டு பிடித்தபோது அவர் அரசியல் பொதுக்கூட்டம் செல்ல ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் விஷயத்தை சொல்ல போகும் வழியில் வந்துவிடுகிறேன் என கூறியுள்ளார். தயாரிப்பாளர் சண்முகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது.

புதிய பாடலுடன் படம் வெளியாக வேண்டுமானால் குறிப்பிட்ட தேதியில் வெளிவராது. சொன்ன தேதியில் வெளியாக வேண்டுமானால் ஸ்ரீதர் விரும்பும் பாடல் இல்லாமல்தான் வெளியாக வேண்டும் என சோகத்துடன் அமர்ந்திருந்தார். சித்ராலயாவிற்கு வந்த கவிஞர் கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதரிடம் சூழ்நிலை கேட்டுக்கொண்டு விஸ்வநாதனை டியூன் போட சொல்லி பத்து நிமிடங்களில் “முத்தான முத்தல்லவோ” பாடலை எழுதி விட்டு நான் ஊருக்கு போகிறேன் எனக்கு ஐந்து ரூபாய் வேணும் என கேட்டார். பாடல் மிகவும் அருமையாக வந்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீதர் பணத்தை உடனடியாக கொடுத்தார். அன்றிரவே அப்பாடல் பதிவாகி மறுநாள் காலையில் படமாக்கப்பட்டது. அந்த பாடலே மிகவும் விரைவாக கண்ணதாசன் எழுதிய பாடல்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |