Categories
உலக செய்திகள்

அயல்நாட்டிலிருந்து வரும் பெண்கள்… 7 வருடம் கொடுக்க முடியாது… புதிய சட்ட தாக்கல்…!!

அயல்நாட்டிலிருந்து திருமணம் முடிந்து நேபாள் நாட்டிற்கு வரும் பெண்களுக்கு ஏழு வருடங்கள் குடியுரிமை வழங்கப்படாது என்ற சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நேபால் நாட்டை சேர்ந்தவர்களை அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஏழு வருடம் முடிந்த பிறகே குடியுரிமை வழங்கப்படும் அதுவரை கிடையாது என்ற சட்டதிருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் நேபால் நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டின் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேபாள் தெற்கு பகுதியை சேர்ந்த ஆண்கள் பீகார் எல்லையை சேர்ந்த பெண்களை திருமணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதாக அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் அடிப்படையில் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் நேபாளில் தங்குவதற்கு உரிமையும் அதன்பிறகு குடியுரிமையும் வழங்கப்படுவதாகும்.

இந்த ஏழு வருடங்களில் திருமணமாகி வந்த பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. மேலும் இந்த வருடங்களில் திருமணம் முடிந்த பெண்கள் சொத்து பரிவர்த்தனை செய்யவும், விற்பனை செய்யவும் தடையில்லை. அவர்கள் விரும்பினால் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பும் படித்துக்கொள்ளலாம். 7 வருடம் முடிந்த பிறகு திருமணம் முடிந்து வந்த பெண்ணிற்கு தேசிய அடையாள அட்டை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |