சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கம்பிரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரத்தின் செயல்பட்ட முதல்வர் தொடங்கு வைத்தார்.
இந்த இயந்திரம் நாமக்கல், சேலம், புதுசத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 கம்பிரஸ்டு பயோ கேஸ் சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று தொடக்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டில் ஆயில் டாக்ஸிங் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் ஏரிசக்தி சேவைகள் நிறுவனம் நாமக்கல்லில் ரூ.34 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
இங்கு 2.4மெகாஹெட் திறன் கொண்ட பயோ கேஸ் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து கம்பிரஸ்டு பயோ கேஸ் தயாரிக்கும் வகையில் புதிய தொழிசாலைக்கு ரூ.25 கோடி செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் கம்பிரஸ்டு பயோ கேஸ், 20 டன் உயிர் உரங்கள் தயாரிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. தமிழ்நாடு மாநிலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் முதலிடத்தில் உள்ளது என திட்டத்தை தொடங்கி வைத்த பின் முதல்வர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.