இந்தோ-திபெத் காவல் படையை எல்லையில் பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இந்தியா-சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது
இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்திய, சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்தது. அதனை முடிவிற்குக் கொண்டுவர இரு நாட்டுப் படைகளையும் விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகில் இருக்கும் மோல்ட என்ற பகுதில் வைத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இரன்டு நாட்டின் ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் 12 மணி நேரம் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் இறுதியாக ஆக்கபூர்வமான முடிவுகள் எடுத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. அம்முடிவுகளின்படி மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து இரண்டு நாட்டின் வீரர்களையும் விலக்கி விடுவது என முடிவாகியுள்ளது.
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளி ல் 20லிருந்து 30 கம்பெனிகள் வரை இந்தோ -திபெத் காவல் படையை பணிக்கு அமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதோடு பேச்சு வார்த்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை மேற்கொள்ளபட்டது . கல்வானில் நடந்த தாக்குதலில் உருவான பதற்றம் சுமுக தீர்வால் தணிந்துள்ளது .