மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கணக்கு உள்ளது. இந்தநிலையில் தான் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தன்னுடைய வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அலுவலர்கள், உடனடியாக மாரியப்பனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்தனர்.. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாரியப்பனின் கணக்கை ஹேக் செய்து, வங்கி ரசீதில் (செலான்) கையெழுத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் 2.5 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ராமானுஜம், தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகாரளித்தார்.. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.