சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் 4, ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1, கிருஷ்ணகிரியில் 2, மதுரையில் 9,
நாமக்கல்லில் 1, புதுக்கோட்டை மற்றும் ராணிப்பேட்டையில் தலா 2, ராமநாதபுரத்தில் 3, சேலம், சிவகங்கை மற்றும் தஞ்சாவூரில் தலா 1, தேனியில் 2, திருவண்ணாமையில் 7, தூத்துக்குடியில் 4, திருநெல்வேலியில் 5, வேலூர் மற்றும் திருச்சியில் தலா 3, விருதுநகரில் ஒருவர் என இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.