தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது.
முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்:
* மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும்.
* பெற்றோல் பங்குகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும்.
* தேனிநீர் கடைகள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள், மொபைல், டிவிபழுது நீக்க கடைகளுக்கு அனுமதியில்லை.
* கார்களில் 3 பேர், ஆட்டோக்களில் இருவர், பைக்கில் ஒருவர் மட்டுமே அனுமதி.
* தேனியில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ பரிசோதனை மையங்கள் இயங்க அனுமதி.
* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். குறிப்பாக பார்சலில் மட்டும் உணவுகள் வழங்க அனுமதி.