ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 10வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து 10 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அடுத்த கல்வியன்றிக்கான வகுப்புகள் நடத்தமுடியாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.