பாப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் ஆகஸ்ட் 29 1958 அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் அவரது பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது முழுப்பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். ஐந்து வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இசைப் பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்5 என்று அழைக்கப்பட்டனர். அவர் தன்னுடைய 13 வயதில் தனியாக பாடத் தொடங்கினார். 1984-ல் வெளியான திரில்லர் ஆல்பம் அவரை உலகப் புகழ் பெற செய்தது. 1987 இல் வெளியான பேட் 1991 இல் வெளியான டேஞ்சரஸ் போன்ற ஆல்பங்கள் அவருடைய குறிப்பிடத்தகுந்த ஆல்பங்கள்.
மைக்கேல் ஜாக்சன் தொடக்கத்தில் கருப்பாகவே இருந்தார். சில வருடங்கள் கழித்து அவருடைய தோல் நிறம் வெகுவாக மாறியது. இது குறித்துப் பல கதைகள் எழுந்தன. ஆனால் ஒரு பேட்டியில் மைக்கேல் ஜாக்சன் அவர் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மூக்கை மட்டுமே அறுவை சிகிச்சை செய்து மாற்றியதாகவும் கூறியிருந்தார். அவருக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் என்று பலமுறை கூறியிருக்கிறார். அவர் முதலில் மேரி பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து ஆனது. இரண்டாவதாக டேபிள்ளோ என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிரின்ஸ் மற்றும் தரிசு என்று இரண்டு குழந்தைகள் உள்ளன.
ஆனால் 2005ல் மீண்டும் அவர் மேல் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது நான்கு மாதத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இதனால் அவருடைய புகழ் குறையவில்லை. மைக்கேல் ஜாக்சன் 2009ல் அதிக அளவில் மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்தார். 2009 ஜூன் 25ல் அனைத்து மக்களும் இந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களுக்குத் தெரிந்த ஊடகங்களிலும் தேடினர். அவருடைய ரசிகர்கள் மிகவும் வருந்தினர்.