Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று கொரோனோவால் பாதித்த 16 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணடியை சேர்ந்த 58 வயது பெண், கொசப்பேட்டையை சேர்ந்த 45 வயது ஆண், ஆலந்தூரை சேர்ந்த 69 வயது முதியவர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் – சீலம்பேடு கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், மணலியை சேர்ந்த 63 வயது முதியவர், மீஞ்சூரை சேர்ந்த 50 வயது ஆணும் கொரோனோவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 5 பேர் பலியாகியுள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆண், பெசன்ட் நகரை சேர்ந்த முதியவர், சூளைமேட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |