Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 402 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 461 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |