வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.