தேனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேனியிலும் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது. நேற்றைய நிலவரப்படி தேனியில் 284 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 360ஆக அதிகரித்துள்ளது. மேலும் தேனியில் இதுவரை 2 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.