சீனா வீரர்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்து 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இந்தியா உட்பட பல நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் முன்னாள் இராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங் கூறுகையில் “நம் வீரர்களில் 20 பேரை இழந்திருக்கும் போதும் இரண்டு மடங்குக்கும் அதிகமான வீரர்களை சீனாவில் கொன்றுள்ளோம் என கூறியிருந்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் சீனா-இந்தியா தூதரக மட்டத்திலும் ராணுவ மட்டத்திலும் இரண்டு நாடுகள் இடையே இருக்கும் பிரச்சனையை தீர்த்துக் கொள்கின்றன. சீன வீரர்கள் 40 பேர் கொலை செய்யப்பட்டதாக இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தகவல் பொய்யானது என என்னால் உறுதியாக கூறமுடியும்” என கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்த விரிவான தகவல்கள் எதையும் அவர் விரிவாக வெளியிடவில்லை.