மதுரையில் இன்று மட்டும் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 988 பேருக்கு கொரோனா தொற்று இருக்க கூடிய நிலையில் இன்று மேலும் புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,082 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 453 பேருக்கு கொரோனா இருக்க கூடிய நிலையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
ஊரடங்கிற்கு முன்னதாக வெறும் 400க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்புஎண்ணிக்கையும் கூட பெரும்பாலும் மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 425 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். 574 பேர் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில்தான் மேலும் 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது அனைவரும் மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.