பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு, சுகாதாரப் பிரச்சினை ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்தை அந்த குழுவானது வெளிப்படுத்துகிறது.
எனவே மாணவர்களுக்கு முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களுடைய ( செயல்திறன் ) பேர்பார்மன்ஸ் – இன் அடிப்படையிலும் இறுதியாண்டு தேர்வில் அவர்களைத் தேர்வு செய்து வைக்கக் கூடிய நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என்ற ஒரு பரிந்துரையை வழங்கி இருக்கின்றார்கள். இதைத் தவிர இந்த முறையை ஏற்றுக் கொள்வதை மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.