Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி… எண்ணிக்கை 1,000த்தை கடந்தது..!!

மதுரையில் மேலும் 96 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000த்தை கடந்துள்ளது.

மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமாயில் கொரோனா படுக்கை வசதிகள் குறைவாக இருந்த நிலையில் தற்போது அதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்த நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

Categories

Tech |