Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விதியை மீறி கடைகளை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதி தலைமையில் சாத்தான்குளத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்விரோதம் காரணமாக போலீசார் இருவரையும் கைது செய்ததாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இருவரின் உடலையும் அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |