கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஓன்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியராஜ். இவரது மகன் காளிதாஸ்(24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரை புதூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து அந்த ஜோடி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது.