குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், ஓட்டுநராக இருந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பும் மது போதையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. வழக்கம்போல் நேற்று மது அருந்திவிட்டு வந்த ராஜசேகர் தனது மனைவி, மகன் மற்றும் தாயிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த மகன் ரவிவர்மன், ராஜசேகரின் மனைவி சுகுணா மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் ஒன்று சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு அவரது காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு அவரது மனைவி மகன் மற்றும் தாயை கைது செய்தனர்.