தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.97% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,648ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,079 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,781 பேர் ஆண்கள், 1,084 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 3,317 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 56,124 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 8,027 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.