Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,654, செங்கல்பட்டில் 131, திருவள்ளூரில் 87, காஞ்சிபுரத்தில் 66, மதுரையில் 97, திருவண்ணாமலையில் 54, விழுப்புரத்தில் 34, தென்காசியில் 5, தூத்துக்குடியில் 49, ராமநாதபுரத்தில் 1, நெல்லையில் 32, தஞ்சையில் 15, ராணிப்பேட்டையில் 2, சிவகங்கையில் 15, கோவையில் 22, அரியலூரில் 8, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 13, ஈரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சியில் 18, கன்னியாகுமரியில் 22, கரூரில் 9, கிருஷ்ணகிரியில் 3, வேலூரில் 51, நாகப்பட்டினத்தில் 62, நாமக்கல்லில் 1, நீலகிரியில் 2, பெரம்பலூரில் 5, புதுக்கோட்டையில் 13, சேலத்தில் 55, தேனியில் 81, திருப்பத்தூரில் 11, திருவாரூரில் 31, திருப்பூரில் 1, திருச்சியில் 76, விருதுநகரில் 40, கடலூர் 41 என அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், டெல்லி -14, ராஜஸ்தான் 5, மேற்குவங்கம் 2, மகாராஷ்டிரா 8, கர்நாடகா 14, தெலங்கானா 1, உத்தரபிரதேசம் 2, கேரளா 6, குஜராத் 3, பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல, வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத் 15, கத்தார் 6, சிங்கப்பூர் 4, சவூதி அரேபியா 3, யுஏஇ, மலேசியா மற்றும் நைஜீரியாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |