தண்டவாளத்தின் நடுவே படுத்து உறங்கிய இளைஞன் ரயில் கடந்து சென்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளான்.
ஜெர்மனியில் இளைஞன் ஒருவன் நண்பர்களுடன் பார்டிக்கு சென்று விட்டு நன்றாக மது அருந்திய நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியிலேயே தூக்கம் வந்ததால் படுத்து தூங்கிவிட்டான். ஆனால் அவன் படுத்து உறங்கியது ரயில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில். சிறுது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று சென்றுள்ளது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் ஒருவர் மீது ரயிலை செலுத்துவதை உணர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். காவல் தேவதை தான் அந்த இளைஞனை காப்பாற்றியிருக்க வேண்டும் எனக் அவர்கள் கருதினர். காரணம் சிறிய காயம் கூட அந்த இளைஞனுக்கு ஏற்படவில்லை. பின்னர் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் இந்த நாளை அவனது இரண்டாவது பிறந்த நாளாக கொண்டாடுங்கள் என கூறி அனுப்பியுள்ளார்.