Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: தந்தை, மகன் மரணம் – பிரேத பரிசோதனை நிறைவு …!!

கோவில்பட்டி கிளை சிறையில் மரணம் அடைந்த தந்தை மகன் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு அடைந்து.

சாத்தான் குளத்த்தில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரிகளான ஜெயராஜ், பெண்ணிக்ஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிர் இழப்புக்கு காரணம் போலீஸ் தான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த இருவரது உடல்களும், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் நேரில் வருகை புரிந்த மாஜிஸ்திரேட் உறவினர்களிடம் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் இருவரது உடல்களிலும் காயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் இரவு 8.10 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை 11 35 மணிக்கு நிறைவு பெற்றது.

Categories

Tech |