பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
எனவே மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களின் பேர்பாமன்ஸ் அடிப்படையிலும் இறுதியாண்டு தேர்வில் அவர்களை தேர்ச்சியை வைக்கும் நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம். இந்த முறையை ஏற்றுக் கொள்வதை மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம். புதிதாக வகுப்புகளை தொடங்க கூடிய நிகழ்வை அக்டோபருக்கு பிறகு வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பாக அதனை தயவுசெய்து மேற்கொள்ளாதீர்கள், அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்று நிபுணர் குழுவானது தனது பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இதனால் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் கல்லூரி திறப்பு மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. மாணவர்களும் மகிழ்சிக்காக மத்திய அரசின் அறிவிப்புக்கு காத்து இருக்கின்றார்கள்.