Categories
Uncategorized

பொழுதுபோக்குக்காக ஆரம்பித்து…. வெறித்தனமாய் மாற்றும் போதை பழக்கம்…!!

போதைக்கு அடிமை என்ற தவறான வழியில் செல்பவர்களை நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும் விதமாக இன்று உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்சனைகளைக் கூட கையால முடியாதவர்கள் கையில் எடுக்கும் பழக்கம் தான் இந்த போதைப் பழக்கம். தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகவும் சாதாரணமாகவும் தொடங்கும் இந்த பழக்கம் தான் நாளடைவில் வெறித்தனமான பழக்கமாக மாறி வாழ்க்கையை பாழாக்குகின்றது. அப்படிப்பட்ட கொடிய பழக்கத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏராளமானவர்கள். அவர்களிடம் இந்த பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கினால் அவர்கள் அதை காது கொடுத்து கேட்பது கடினம். இந்த கொடிய பழக்கத்தில் சிக்கி அதிலிருந்து விடுபட்டவர்கள் சில பேர் மட்டுமே. பழங்காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த போது இதுபோன்ற பழக்கம் இருந்ததாக தெரியவில்லை. தனிக்குடித்தனம் என்ற ஒரு நிலை உருவான போதே மன அழுத்தம் எனும் போதை நம்மை நிகழ்கால போதை வாழ்க்கைக்கு எளிதில் தள்ளி விட்டுள்ளது. போதை பழக்கத்தை குணப்படுத்த முறையான மருத்துவம் பார்க்க வேண்டும் எனவும் அது மூளை சம்பந்தப்பட்ட ஒரு நோய் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |