Categories
Uncategorized

இத்தனை பிரச்சனையா…? வேண்டவே வேண்டாம்…. ஒதுக்கி தள்ளுங்க மக்களே…!!

வருடம் தோறும் ஜூன் 26 போதை பொருள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாய் ஆரம்பித்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வெகுகாலமாக தனிமையில் இருப்பவர்களும் தீய நட்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள்.

  • போதை பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் முதலில் பாதிக்கப்படுவது அவரது உடல்நலம்.
  • குடும்பத்தின் தலைவன் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அந்தக் குடும்பத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும்.
  • மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் “பிள்ளையை வளர்த்திருக்கும் லட்சணம்” என பெற்றோர்களுக்கு அவப்பெயர் கிடைக்கும்.
  • குடும்பத்தில் தந்தை போதை பழக்கத்திற்கு அடிமையானால் மகள் வெறுப்பு கொள்வாள். மகன் தந்தையை பின்பற்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
  • சமீப காலமாக கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் மனைவியை கணவன் கொல்வதும் கணவனை மனைவி கொல்வதும் நிகழ்ந்து வருகின்றது.
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையாபவர்களால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் வாகனத்தில் செல்பவர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

Categories

Tech |