சென்னையில் நேற்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 668 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 26,472 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 6,837,
கோடம்பாக்கம் – 4,908,
திரு.வி.க நகரில் – 3,896,
அண்ணா நகர் – 4,922,
தேனாம்பேட்டை – 5,316,
தண்டையார் பேட்டை – 5,531,
வளசரவாக்கம் – 1,957,
அடையாறு – 2,777,
திருவொற்றியூர் – 1,755,
மாதவரம் – 1,383,
பெருங்குடி – 916,
சோளிங்கநல்லூர் – 894,
ஆலந்தூர் – 1,124,
அம்பத்தூர் – 1,741,
மணலி – 718 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 1094 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.