புதுச்சேரியில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 461 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.