Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விவரம் :

இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு அவகாசம் :

இந்த மனு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த நிலையில் ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு அவகாசம் :

முன்னதாக ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க கோரி மற்றொரு வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு தரப்பில் அவாகசம் கோரப்பட்டது. இதனையடுத்து ஜூலை 6 வரை அவகாசம் அளித்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |