Categories
அரசியல்

 “REAL HERO”இது தெரியாம போச்சே…. கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்….!!

நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் கோர தாண்டவம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வரும் சமயத்தில், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டு இருந்தது.

தற்போது அப்படி காணப்பட்ட மாவட்டங்களிலும் கொரோனா மீண்டும் தலை தூக்குவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணி மற்றும் உதவும் பணிகளில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் களமிறங்கி பணியாற்றி வரும் சூழ்நிலையில், நடிகர் அஜித் கொரோனவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் என மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் சிவப்பு மண்டலங்களாக கருதப்படும் இடங்களில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள் என நடிகர் அஜித் ஆலோசனை அளித்ததாகவும், அதன்பேரில் ட்ரோன் மூலம் தமிழகத்தில் இருக்கக் கூடிய சிவப்பு மண்டலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நடிகர் அஜித்தின் தாக்ஷா குழு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடிகர் அஜித் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், பலருக்கு தெரியாமல் கொரோனாவுக்கு எதிரான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவரும் அவரது குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

Categories

Tech |