Categories
அரசியல்

இது ஜனநாயகத்திற்கு எதிரானது… ஆர்.பி.ஐ.-ன் கீழ் கூட்டுறவு வங்கிகள் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்..!!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் விரோத அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க அவசர சட்டத்தை திரும்ப பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நேற்று நடைபெற்றது. சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை இனி ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிக்கும் என அறிவித்தார். 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 58 மாநிலங்களிடை கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ஆர்பிஐ கட்டுப்பாட்டில் வருகிறது.

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செய்லபடுத்தப்படும் கடன் திட்டங்கள், சேமிப்பு ஆகியவை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |